நன்றி.
தோழன் சாக்கன் மற்றும் தோழி ஆஷ்னா.
நீண்ட காலமாக தமிழில் எழுதிய பதிவுகளை இணையதள பதிவேற்றம் ஆக்க வேண்டும் என்று நினைத்து வந்தேன்.வழிகாட்டிய இருவருக்கும் நன்றி.
"காற்று வெளியிடை கண்ணம்மா -நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்;
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூரித் ததும்பும் விழிகளும் -பத்து
மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் -இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் -எனை
வேற்று நினைவின்றி தேற்றியே -இங்கோர்
விண்ணவனாகப் புரியுமே !!!"
உலக மொழியாளர்கள் மத்தியில் பாரதியின் இடம் என்ன என்பது பலருக்கும் இன்றைய உலகில் புலப்படாமல் இருக்கிறது .காரணம் அவரை நாம் வெறும் கவிஞன் என மட்டுமே பார்க்கிறோம் .மயிலாப்பூரில் காந்தி பாரதியை சந்தித்த போது கேட்ட கேள்வி "கண்ணில் ஒளி கொண்டு பேச்சில் மிடுக்கோடு இருக்கும் இந்த மனிதன் யார் ? ."தமிழ் நாட்டின் சொத்து " என்று ராஜாஜி கூறினார்.அதற்கு காந்தி "இல்லை,இவர் இந்தியாவின் சொத்து " என்றார்.அப்பேற்பட்ட பாரதி வறுமையில் வாழ்ந்து மடிந்த போது தமிழ் சமூகம் அவருக்கு செய்ய வேண்டிய பெருமையை உரிய நேரத்தில் செய்ய மறந்தது.
தமிழ் மொழியில் பாரதியின் பங்கு என்று பட்டியலிட்டால் அவர் ஆற்றிய தொண்டு ஏராளம்.வாழ்க்கை கல்வி என்பதற்கு வித்திட்டவன் பாரதி ."சாதிகள் இல்லையடி பாப்பா " என்று சமூக நீதிக் கல்விக்கு வித்திட்டவன் பாரதி.தமிழில் உருவகக் கதைகள் இன்று பரவலாக இருப்பதற்கு காரணம் பாரதியின் சுதேச மித்ரன் பங்களிப்பு."Women Empowerment " என்று இன்று போராடும் கருத்தியலுக்கு பாரதியின் பாடல்களே வித்து.
தனது படைப்பான "பாஞ்சாலி சபதத்தில் ",ஒற்றை ஆடையோடு இருக்கின்ற திரௌபதியை துச்சாதனன் துகிலுரிக்கும் போது,நீதி வேண்டி திரௌபதி அவையின் முன் ஓடுவாள்."மன்னர் என்னை தோற்ற பின் தன்னை தோற்றாரா அல்லது தன்னை தோற்ற பின் என்னை தோற்றாரா ?" என்ற கேள்விக்கு "எக்காலத்தும் மாதரசி மணவாளனின் சொத்து " என்று பீஷ்மர் கூற "பேய் அரசு செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் " என்று பாஞ்சாலி வழியே பாரதி கூறுவது இக்காலத்துக்கும் பொருந்தும்.
இவை மட்டுமல்ல "அரசியல் நையாண்டி " என்று ஒரு தனி பிரிவு உண்டாக்கி பத்திரிகை சுதந்திரம் தோன்ற அன்றே வித்து இட்டவன் பாரதி .மேலும் கம்யூனிசம் ,சோசியலிசம் போன்ற வார்த்தைகளுக்கு இணையான தமிழ் சொல் கண்டு சொன்னவன் பாரதி.இப்பேற்பட்ட பாரதியின் பெருமை இன்றைய இளைய தலைமுறைக்கு முழுவதும் போய் சேராமல் இருப்பது பெரும் வருத்தமே."யான் கண்ட மொழிகளிலே தமிழ் மொழி போன்று இனிதாவது எங்கும் காணோம் " என்று பாடிய பாரதி 32 மொழிகளை அறிந்தவன்.அவற்றுள் தமிழை உச்சம் என கொண்டாடி மகிழ்ந்தான்.
உலக புகழ் பெற்ற பாடகி Adele தனது Skyfall என்ற பாடல் பாரதியின் "அச்சம் அச்சம் இல்லை " என்ற பாடலின் சாராம்சம் என்று பாரதியை புகழ்கிறார்.இன்றைய சூழலில் பாரதியின் துடிப்பும் பரந்த பார்வையும் நமக்கு மிகவும் தேவைப்படுகிறது.இதனை உணர்ந்து நாம் ஆட்கொள்ள வேண்டிய பொருட்களுள் அறிவை வலுவூட்டும் புத்தகங்ளும் ஒன்றாக இருக்க வேண்டும்.கவிதைகள் செய்வோம் கவிவழி தமிழ் சேர்ப்போம்.
சமர்ப்பணம் பாரதிக்கு...

No comments:
Post a Comment